tna seithi founder

A TNAUK Publication

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு பூரண ஆத­ரவு வழங்­குவோம்

Anonymous 2018-05-13 20:15:00

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு பூரண ஆத­ரவு வழங்­குவோம். எனினும் பூரண அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை செய்­வதே எமது நோக்­க­மாக இருந்­தது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­­ர­ம­ரத்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்  ஜனா­தி­பதியின் கொள்கை விளக்­க­வுரை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்புவேளை மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு ‍உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது அதி­கார பர­வ­லாக்கம், நிறைவேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை ஒழித்­த­லுக்கு மாத்­திரம் மட்­டுப்­பட்­ட­தல்ல. நாட்டு மக்­களின் அடிப்­படை உரிமை சம்­பந்­தப்­பட்­ட­தாகும். மனித உரிமை கள் உட்­பட அனைத்து வித­மான உரி­மை­களை உள்­ளடக்­கி­யதே அர­சி­ய­ல­மைப்­பாகும்.

பூரண அர­சிய­ல‍­மைப்பு மாற்றம் செய்ய வேண்டும் என்­பது எமது நோக்­க­மாகும்.என்­றாலும் தற் ­போ­தைக்கு அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­த­த்திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு நான் தீர்­மா­னித்­துள்ளேன்.

எனவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையின் எஞ்­சிய ஒன்­றரை வருட ஆயுட்காலத்தில் நாட்டு மக்­க­ளு க்கு வழங்­கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். குறுகிய காலத் திற்குள் மக்களுக்கான உரிய சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.