tna seithi founder

A TNAUK Publication

ஜன­நா­யகம் , சமா­தா­னத்தை பாது­காக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம்

Anonymous 2018-05-13 21:15:00

நாம் நாட்டை பொறுப்­பேற்கும் போது நாடு இருளில் இருந்­தது. அதனை நாமே வெளிச்­சத்­திற்கு கொண்டு வந்தோம். ஆகவே எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் ஜன­நா­யகம் மற்றும் சமா­தா­னத்தை பாது­காக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்போம் என்று ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்  வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

சர்­வ­தேச ரீதி­யாக இலங்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டிருந்த நிலையில் அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இல்­லாமல் செய்தோம். தகவல் அறியும் சட்­டத்தை கொண்டுவந்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டினோம்.

அர­சியல் சவால்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மாக முகம் ­கொ­டுப்பேன் என்று ஜனா­தி­பதி கூறினார். ஆகவே எத்­த­கைய சவால்­க­ளுக்கும் நாம் முகம் ­கொ­டுப்போம். நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வந்த போது அதனை வெற்­றி­க­ர­மாக முகம்­கொ­டுத்தோம். நாம் நாட்டை பொறுப்­பேற்கும் போது அது இருளில் இருந்­தது. தற்­போது அதனை நாமே வெளிச்­சத்­துக்கு கொண்டு வந்தோம்.

முன்­னைய ஆட்­சியின் போது உலகில் அதி­க­ள­வி­லான அமைச்­ச­ர­வையே இருந்­தது. அதனை அனை­வரும் மறந்து விட்­டனர். யுத்தம் முடி­வ­டைந்து நாட்டை முன்­னேற்ற வாய்ப்பு கிடைத்­தது. எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முன்­னைய அர­சாங்கம் தவ­றி­விட்­டது. தற்­போது நாட்டில் வெள்ளை வேன் கலா­சாரம் இல்லை. ஊடகவியலாளர் கள் வெளிநாடு செல்லாமல் நிம்மதியாக உறங்க முடியும். ஆகவே ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.