tna seithi founder

A TNAUK Publication

மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­யது ஜனா­தி­ப­திக்­குள்ள பாரிய பொறுப்­பு

Administrator 2018-05-13 20:15:00

ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வு­ரையில் அன்­றைக்கும் இன்­றைக்கும் நிறைய வித்­தி­யாசங்கள் உள்­ளன. ஜனா­தி­பதி தனது உரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் குறித்து பேசாமல் விட்­ட­தற்­காக அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை நிறுத்தி விட முடி­யாது. நாம் அதற்­கான பய­ணத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்போம்.மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­பட வேண்­டி­யது ஜனா­தி­ப­திக்­குள்ள பாரிய பொறுப்­பாகும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை (10-05-2018) ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் நாம் ஆத­ரவு வழங்­கினோம்.இந்த அர­சாங்­கத்தின் மீது பல எதிர்­பார்ப்­புகள் காணப்­பட்­டன. அதில் ஒரு சில விட­யங்களில் முன்­னேற்றம் உள்­ளது. குறிப்­பாக ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டல் போன்ற விட­யங்களில் ஆரோக்­கி­ய­மான பலன்கள் கிடைத்­துள்­ளன.

இந்த அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பு­களில் புதிய அர­சி­ய­ல­மைப்பும் ஒன்­றாகும். இந்த அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக வழி­ந­டத்தல் குழு நிறு­வப்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பு சபைக்­காக வழி­ந­டத்தல் குழுவை அர­சி­ய­ல­மைப்பு சபை உரு­வாக்கும் போது பாரா­ளு­மன்­றத்தில் எவரும் எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை. இந்த விவ­கா­ரத்­திற்கு எவரும் வாக்­கெ­டுப்பும் கோர­வில்லை.அனை­வரும் ஆத­ரவு வழங்­கினர். இவ்­வா­றான சந்­தர்ப்பம் ஒரு போதும் கிடைக்­காது.

எனினும் இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது விளக்­க­வு­ரையில் எதுவும் கூற­வில்லை. ஜனா­தி­ப­தியின் ஆரம்ப கொள்கை பிர­க­டன உரைக்கும் கடந்த 8 ஆம் திகதி ஆற்­றிய உரைக்கும் பாரிய வித்­தி­யா­சங்கள் உள்­ளன. அப்­போது நல்­லி­ணக்­கத்தை பற்­றியும் அர­சி­ய­ல­மைப்பு பற்­றியும் பேசிய ஜனா­தி­பதி,அது பற்றி அண்­மையில் ஆற்­றிய கொள்கைவிளக்­க­வுரையில் எத­னையும் கூற­வில்லை.

ஆனாலும் அவர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கூறாமல் இருந்­த­மைக்­காக அதற்­கான பணிகள் நிறுத்­தப்­பட்டு விட்­ட­தாக கருத முடி­யாது.அதனை நாம் நிறுத்த விடவும் மாட்டோம். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை நாம் தொடர்ந்து முன்­னெ­டுப்போம். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். புதிய அரசியலமைப்பு என்பது ஜனாதிபதிக்கு வழங்கிய மக்கள் ஆணையாகும். அதனை நிறைவேற்ற வேண்டியது ஜனாதிபதியின் பாரிய பொறுப்பாகும்.எனவே புதிய அரசியலமைப்புக்கான பணிகளுக்கு அன்று போல் இன்றும் நாம் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவோம்.