tna seithi founder

A TNAUK Publication

அதி­கார போராட்டம் மட்­டுமே ரணில் - மைத்­திரி ஆட்­சியில் நில­வு­கின்­றது

Administrator 2018-05-13 18:15:00

மக்­களின் நம்­பிக்­கையை ஏமாற்றும், வாக்­கு­று­தி­  களை மீறும், குற்­ற­வா­ளி­க­ளையும் ஊழல்வாதி­க­ளையும் பாது­காக்கும் மிகவும் மோச­மான ஆட்­சி ­யையே இன்று ரணில் -– மைத்­திரி அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.அதி­கார போராட்டம் மட்­டுமே இந்த ஆட்­சியில் நில­வு­கின்­றது என்று எதிர்க்­கட்­சி­களின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பியின் தலை­வ­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில்  வியா­ழக்­கி­ழ­மை­ (10-05-2018) ந­டை­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் 

மிகப்­பெ­ரிய அர­சியல் பலம், அதி­கார பலம், இரா­ணுவ பலம், பண பலம், ஊட­கங்கள் என அனைத்தும் அர­சாங்­கத்தின் கைக்குள் இருந்த நிலையில் அவ்­வா­றான ஒரு சர்­வா­தி­கார ஆட்­சி­யினை வீழ்த்­து­வதே கடந்த 2015 அம ஆண்­டு­வரை அனை­வ­ருக்கும் இருந்த பாரிய சவா­லாக இருந்­தது. அவ்­வா­றான ஒரு நிலையில் அனை­வ­ரதும் முயற்­சியின் கார­ண­மாக அப்­போ­தைய சர்­வா­தி­கார ஆட்­சி­யினை வீழ்த்தி புதிய ஆட்­சிக்­கான அனு­ம­தி­யினை மக்கள் வழங்­கினர். 

அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட அர­சாங்­கத்தின் சுக்கான் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கைக­ளுக்கு வழங்­கப்­பட்­டது. ஆனால் ஆட்­சி­யினை பெற்­றுக்­கொண்ட இந்த அர­சாங்­கத்­தினால் தமது பொறுப்­பு­களை சரி­யாக முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது போய்­விட்­டது. கடந்த மூன்று ஆண்­டுகள் மோச­மான, தோல்வி கண்ட, மக்­களின் நம்­பிக்­கையை வீழ்த்­திய ஆட்­சியே ரணில் -மைத்­திரி ஆட்­சி­யாகும். இத­னையே ஜனா­தி­பதி தனது உரை­யிலும் சுட்­டிக்­காட்­டினார். அதேபோல் இந்த அர­சாங்கம் வெறு­மனே அதி­கார போட்­டியில் மட்­டுமே கடந்த மூன்று ஆண்­டுகள் பய­ணித்­தது என்­ப­தையும் ஜனா­தி­ப­தியே தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

கடந்த மூன்று ஆண்­டு­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி -ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஆகி­ய­வற்றின் பலப் பரிட்­சையே இடம்­பெற்று வந்­தது. இதில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டின் ஐக்­கி­யத்தை கட்­டி­யெ­ழுப்­பவோ, மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டு­தவோ, நாட்டின் பொரு­ளா­த­ரத்தை மீட்­டெ­டுக்­கவோ எந்­த­வொரு நோக்­கமும் இருக்­க­வில்லை. யாரை யார் வீழ்த்­து­வது என்ற போட்டி மட்­டுமே இரண்டு தரப்­பினர் மத்­தி­யிலும் இருந்­தது. இதன் விளை­வாக பிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் மக்கள் நிரா­க­ரிக்கும் நிலை­மையே ஏற்­பட்­டது. இன்றும் ஐக்­கிய தேசியக் கட்சி தனது பலத்­தினை தக்­க­வைக்க அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்ள, தலை­மைத்­து­வத்தை பெற்­றுக்­கொள்ள மட்­டுமே முயற்­சித்து வரு­கின்­றது. இந்த பிரச்­சி­னைகள் எவையும் மக்­களின் பிரச்­சி­னைகள் அல்ல. மாறாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் சுய­நல போக்கு மட்­டு­மே­யாகும். அர­சாங்­கத்தை இயக்கும் பிர­தான கட்­சி­குள்­ளேயே குழப்பம் ஏற்­பட்ட முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். கட்­சியை தக்­க­வைத்துக் கொள்ள முடி­யாத மோச­மான நிலை­மை­யையும் மக்­களின் எதிர்ப்பை சந்­திக்க நேர்ந்­ததும் இதுவே முதல் சந்­தர்ப்­ப­மாகும். 

மறு­புறம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இதே நிலையில் தான் பய­ணித்து வரு­கின்­றது. பாரா­ளு­மன்றம் ஏன் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது , அதற்­கான சரி­யான கார­ணிகள் என்ன, அதனால் எதிர்­பார்க்கும் நோக்­கங்கள் என்ன என்ற எதையும் ஜனா­தி­பதி அவ­ரது உரையில் குறிப்­பி­டவே இல்லை. என்ன கார­ணத்­திற்­காக பாரா­ளு­மன்றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது என்ற கார­ணியை மக்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருக்க வேண்டும். ஆனால் கூற­வில்லை, காரணம் என்­ன­வென்றால் தனது கட்­சிக்குள் இடம்­பெறும் குழப்­பங்கள், தான் நாட்டில் இல்­லாத நிலையில் கட்­சியில் இன்­னொரு குழு என்ன தீர்­மானம் எடுக்கும் என்ற சுய­நல நோக்­கத்தை கருத்தில் கொண்டே பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி ஒத்­தி­வைத்தார். 

ஆகவே இரண்டு தலை­மை­களும் தமது சுய­நல அதி­கார நோக்­கங்­களை கருத்தில் கொண்டே பய­ணிக்­கின்­றன என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­கின்­றது. அதேபோல் இனியும் இந்த அர­சாங்கம் தேசிய அர­சாங்­க­மாக பய­ணிக்கும் என எதிர்­பார்க்க முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்­சியில் உள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 96 பேரில் 23பேர் மட்­டுமே ஆளும் கட்­சியில் உள்­ளனர். ஆனால் அவர்­க­ளிலும் பலர் நடு­நி­லை­யாக உள்­ளனர். ஆகவே இந்த ஆட்­சி­யினை தேசிய அர­சாங்கம் எனக் கூற முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சில குழுக்­களும் இணைந்து அமைத்­துள்ள அர­சாங்கம் என்றே கூற வேண்டும். 

 இந்த அர­சாங்கம் சிறந்த நிரு­வா­கத்தை கொண்­டுள்­ள­தாக கூற முடி­யாது.பொரு­ளா­தார வீழ்ச்சி, ரூபாயின் பெறு­மதி வீழ்ச்சி, உள்­நாட்டு உற்­பத்தி வீழ்ச்சி என பல்­வேறு துறை­க­ளிலும் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. ஜனா­தி­ப­திக்கும் பொரு­ளா­தரம் குறித்தும் எந்த வித தெளிவும் இல்லை. அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் நீதித்­துறை திருத்த சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மூன்று ஆண்­டு­களில் சட்­டத்தை நிறை­வேற்ற முடி­யாத ஊழலை ஒழிக்க முடி­யாத ஆட்­சியே இடம்­பெற்று வரு­கின்­றது. ஜனா­தி­பதி பிர­தமர் அமைச்­சர்கள் என அனை­வரும் ஊழ­லுக்கு எதி­ராக செயற்­பட முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் உய­ர­தி­கா­ரிகள் ஊழல் குற்­றங்­களில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பிர­த­மரின் நண்­பர்கள் அவர் பரிந்­து­ரைக்கும் நபர்கள் கொள்­ளை­யர்­க­ளாக உள்­ளனர். அண்­மையில் ஜனா­தி­ப­தியின் உயர் மட்ட அதி­கா­ரிகள் கப்பம் பெற்ற குற்­றத்தில் கைது­செய்­யப்­பட்­டனர். ஆனால் இந்த கப்பம் பெரும் செயற்­பாடு வெறு­மனே அவர்­களின் தனிப்­பட்ட அதி­கா­ரத்தில் பெற முடி­யாது. ஜனா­தி­ப­தியோ அல்­லது அவ­ரது செய­லாளர் அனு­மதி கொடுத்­தி­ருக்க வேண்டும். ஆகவே விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும். 

மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் மதிய வங்கி ஆளுநர் பிர­த­மரால் நிய­மிக்­கப்­பட்­டவர். மத்­திய வங்கி ஆளுநர் பிர­த­ம­ருடன் நெருங்­கிய நண்பர், பிர­த­ம­ரது அனு­ம­தியில் பிர­த­ம­ரது பரிந்­து­ரையில் நற்­சான்­றிதழ் வழங்கி நிய­மிக்­கப்­பட்­டவர். அவரே மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டித்து நாட்­டினை விட்டு வெளி­யே­றி­யுள்ளார். அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் மூல­மாக நிய­மிக்­கப்­பட்ட தூது­வர்­களில் பலர் இன்றும் தேடப்­பட்டு வரும் நபர்கள். இவர்கள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களில் உள்­ளன. இவர்கள் அனை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் உற­வி­னர்கள். ஆகவே முன்னாள் ஜனா­தி­ப­திகள் இப்­போ­தைய ஜனா­தி­பதி பிர­தமர் ஆகி­யோரின் தலை­யீட்டில் தான் பாரிய ஊழல் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இந்த ஊழல் மோச­டிகள் அனைத்­துமே அரச குடும்­பத்தின் உள்­ளேயே நிறைந்து உள்­ளன. ஆனால் ஊழல் ஒழிக்­கப்­படும், குற்­றங்கள் தடுக்­கப்­படும் என இவர்கள் கூறிக்­கொள்­கின்­றனர். ஊழலை செய்­கின்ற அர­சாங்கம், ஊழல் வாதி­களை காப்­பற்­று­கின்ற அர­சாங்கம் இப்­போது சட்­டத்தை கொண்­டு­வந்து குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­க­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். இது ஒரு­போதும் இடம்­பெ­றாது. இவர்­க­ளினால் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க முடி­யாது.  

 தேசிய பிரச்­சி­னைகள் குறித்து ஜனா­தி­பதி பேசு­கின்றார்.கடந்த காலங்­களில் தேசிய பிரச்­சினை குறித்து தீர்வு காண பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அர­சியல் அமைப்பு குறித்து முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் இதில் எந்த முயற்­சி­களும் முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இடை நடுவே அனைத்­தையும் நிறுத்­தி­விட்டு அதற்­கான செல­வு­களை கவ­னத்தில் கொள்­ளாது செயற்­ப­டு­கின்­றனர். ஆகவே தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத அதற்­கான முயற்­சி­களை எடுத்தக் தெரி­யாத அர­சாங்­கமே இன்று இயங்கி வரு­கின்­றது. அதேபோல் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தாக கூறிய போதும் அதில் எந்த உண்­மையும் இல்லை. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக ஒவ்­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களும் வாக்­கு­று­தி­களை வழங்­கினர். ஆனால் ஒரு­வரும் அதனை நிறை­வேற்­ற­வில்லை. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­வது மக்­களின் ஆணை­யாகும். ஒவ்­வொரு தேர்­த­லிலும் இந்த வாக்­கு­று­தி­களை நம்­பியே மக்கள் வாக்­க­ளித்­தனர். நிறை­வேற்று அதி­கா­ரத்­துடன் வரு­ப­வர்கள் தனது அதி­கா­ரத்தை கையில் எடுத்­து­கொண்டு என்ன செய்­வார்கள் என்­பது மக்­க­ளுக்கு நன்­றாக தெரியும். அதி­யுச்ச சர்­வா­தி­கார தலை­வர்கள் தமது அதி­கா­ரத்தை வைத்து நாட்­டினை எவ்­வாறு வழி­ந­டத்­தினர் என்­பதும், பலம் இல்­லாத கொள்கை இல்­லாத எந்த அணி என தெரி­யாத ஒருவர் நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்தால் என்ன நடக்கும் என்­ப­தையும் இன்று மக்கள் அவ­தா­னித்து விட்­டனர். ஆகவே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்கம் குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். 

ஆனால் இப்­போதும் ஜனா­தி­ப­திக்கோ அல்­லது பிர­த­ம­ருக்கோ நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் எந்த எண்­ணமும் இல்லை. இந்த ஆட்­சி­யினி பின்னர் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகார நாற்காலியில் அமரலாம் என ஜனாதிபதியும் பிரதமரும் கனவு காண்கின்றனர். இனியும் இவர்களின் ஒருவர் நிறைவேற்று நாற்காலியில் அமரலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடைபெற முடியாத காரியமாகும். அதையும் தாண்டி அமர நினைத்தால் மக்களின் செயற்பாடுகள் பாரதூரமானதாக அமையும். கடந்த மூன்று ஆண்டுகளும் மிகவும் மோசமான, மக்களை ஏமாற்றிய, வாக்குறுதிகளை மீறிய அரசாங்கம் ஆட்சி நடத்திய காலகட்டமாகும். 

அடுத்த இரண்டு ஆண்டுகளேனும் சரியான பயணத்தினை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.ஆனால் அவ்வாறு எந்த மாற்றமும் இடம்பெறப் =போவதில்லை. இந்த ஆட்சியினை இனியும் மக்கள் ஆதரிக்கப்போவதில்லை. அடுத்த தேர்தலில் இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளும் மக்களை கஷ்டப்படுத்தும், கடன் சுமைகளை அதிகரிக்கும், ஜனநாயகத்தை வீழ்த்தும், மோசடிக்காரர்களை பாதுகாக்கும் ஆட்சியே முன்னெடுக்கப்படும் என்றார்.