tna seithi founder

A TNAUK Publication

அகிம்சை வழிப்போராட்டத்தை ஆரம்பிப்தற்கு  அடித்தளமாக மே தினம் அமையட்டும்

Anonymous 2018-05-01 14:09:00

தமிழ் தொழிற்சங்கக் கூட்டனியின் முன்னாள் செயலாளர் நாயகம் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் மே தினச் செய்தி

இலங்கைத் தொழிலாளர்கள் உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டாடவிருந்த மேதினத்தை பௌத்த ஆதிக்கம் கொண்ட அரசாங்கம் தடைசெய்து பிறிதோர் தினத்தில் கொண்டாடு மாறு அரசு கட்டளையிட்டுள்ளது. இக்கடளையை மீறி உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து மே தினத்தன்றே வடகிழக்கு தமிழ் தொழிலாளர்கள் கொண்டாட வுள்ளனர். 

நல்லாட்சியின் முடிவுகளை தவிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. தமிழர்களின் அகிம்சை வழிப்போராட்டத்தை ஆரம்பிப்தற்கு  அடித்தளமாக இப்போராட்டம் அமையட்டும். செயலிழந்த மொழிவழித் தொழிற்சங்கங்களை தழிழ் அரசுக்கட்சி புத்துயிர் அளித்து செயறபட வைக்க வேண்டிய  சந்தர்ப்பம் இதுவாகும். தமித் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள ;உரிமையை வென்றெடுடுப்போம்

ஐ.தி.சம்பந்தன்