tna seithi founder

A TNAUK Publication

அர­சாங்­கத்தில்  அங்கம் வகிக்கும்   சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள்

Administrator 2018-05-13 17:15:00

தேசிய அர­சாங்­கத்தின் பயணம் 2020 ஆம் ஆண்­டு­வரை நீடிக்­காது. அதற்கு முன்னர் இந்த  அர­சாங்கம் கலைக்கப்­படும். இப்­ போது தேசிய அர­சாங்­கத்தில்  அங்கம் வகிக்கும் எமது ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணை­வார்கள் என பாராளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.  

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை (10-05-2018) ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் போது உரை­யாற்­று­கையில் அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஐக்­கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்­சி­க­ளுக்கும் சம உரி­மைகள் இருக்கும் எனவும், வேலைத்­திட்­டங்கள் சம­மாக முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை முழு­மை­யாக புறக்­க­ணித்து ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தார கொள்­கைக்கு அமை­யவே அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

ஆரம்­பத்தில் இருந்தே தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­பா­டு­களில் நாம் திருப்தி கொள்­ள­வில்லை. ஒரு கட்­டத்தில் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க இய­லாத கார­ணத்­தி­னா­லேயே நாம் கொள்­கை­களை விமர்­சிக்க ஆரம்­பித்தோம். மத்­திய ஊழல், பொரு­ளா­தார செயற்­பா­டு­களில் இலங்­கைக்கு பொருந்­தாத நகர்­வுகள் என்­ப­வற்றை கருத்தில் கொண்டு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆத­ரிக்­கவும் தீர்­மானம் எடுத்தோம். எமது மன­சாட்­சிக்கு அமைய நாம் செயற்­பட்­டுளோம்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 23பேர் இப்­போதும் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுடன் நாம் முரண்­ப­ட­வில்லை. அவர்­க­ளுடன் இணக்­கப்­பாடு அடிப்­ப­டையில் செயற்­பட்டு வரு­கின்றோம். மேலும் 2020ஆம் ஆண்டு வரையில் இந்த அர­சாங்கம் பய­ணிக்­காது. அதற்கு முன்னர் இந்த அர­சாங்கம் கலைக்­கப்­படும். அதில் இப்­போது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் எமது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள். அடுத்­த­தாக மாகா­ண­ச­பைகள் தேர்­தல்­களை முகங்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் உள்­ளது. ஆகவே இந்த தேர்­தல்கள் அனைத்­துமே அர­சாங்­கத்­திற்கு சவா­லாக அமையும். இப்­போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏமாற்றி அவரை நெருக்­க­டிக்குள் தள்ளி ஐக்­கிய தேசியக் கட்சி தப்­பித்­து­கொள்ள முயற்­சிக்­கின்­றது.

கடந்த மூன்று ஆண்­டு­களில் ஜனா­தி­பதி மூல­மாக பல்­வேறு நல்ல வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆரோக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை நிரா­க­ரிக்க முடி­யாது. குறை கூறவும் முடி­யாது. ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுத்த பல்­வேறு மோச­மான செயற்­பா­டு­களை தடுத்து சரி­யான பாதையில் நாட்­டினை கொண்டு செல்ல ஜனா­தி­ப­தியால் முடிந்­தது. அதனை மறுக்­கவும் முடி­யாது. 

அதேபோல் மேற்கு நாடு­க­ளுக்கு சாத­க­மான நாட்­டினை கொண்டு சென்று நாட்டில் அந்­நிய சக்­தி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை ஐக்­கிய தேசிய கட்சி முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதனை நிறைவேற்ற ஜனாதிபதி முறைமையினை நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டும். நிறைவேற்று ஜனாதிபதியின் அவசியம் என்ன என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.