tna seithi founder

A TNAUK Publication

"சைவ ஓளி அணைந்தது" வசந்தா வைத்தியநாதனுக்கு இரங்கல்

Anonymous 2018-03-19 11:35:00

சைவச் செம்மல் திருமதி வசந்தா  வைத்தியநாதன்அவர்களின் மறைவையொட்டிய  அனுதாபச் செய்தி,

சைவத்தமிழ் உலகின் ஒளியாக விளங்கிவந்த சைவச்செம்மல்  திருமதி வசந்தா வைத்தியநாதன்  அவர்கள் 14-03 -2018 அன்று  சிவாதம் அடைந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்தோம்.

பிரபல சைவ நிறுவனங்களாகிய ஆகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு விவேகானந்நா சபை, கம்பன் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சைவத் தமிழ்ப்பணி  மேற்கொண்டு வந்த அம்மையாரின் மறைவு சைவத் தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்.

சிவத்தமிழச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பின் பேச்சுத்துறையால்  எற்பட்ட அவர் இடத்தை நிரப்பி  வந்தவர். 
1969ல் நடைபெற்ற நாவலர் தேசிய விழாவில் பெரும் பங்களித்த வசந்தா அம்மையாரை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை என்றும நினைவு கூறும்.

சென்றாண்டு  கொழும்பு விவேகானந்த சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அம்மையார் என்னைச்  சந்தித்தபோது 'நாவலர் கல்விப் பணியை தொடருங்கள் நாவலர் சிந்தனையைப் பரப்புங்கள்' என் வாழ்தியதை என்னால் மறக்க முடியவில்லை.

இறுதிக் காலத்தில் கம்பன்கழக ஆலயத்தில் அமைதியைத் தேடிக்கொண்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.

ஐ.தி.சம்பந்தன்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாலர் சபை – சர்வதேச இணைப்பாளர்