tna seithi founder

A TNAUK Publication

யாழ் மாந­கர சபையின் கடந்த கால மோசடிகள் குறித்த அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை

Anonymous 2018-05-10 15:45:00

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான வடக்கு மாகாண சபை­யின் விசா­ரணை அறிக்கை கோரப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் இ.ஆர் னோல்ட்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று சபை மண்­ட­பத்­தில் நடை­பெற்றது. சபை­யின் உறுப்­பி­ன­ரான ந.லோக­த­யா­ளன் இந்த விட­யம் தொடர்­பில் கோரிக்கை ஒன்றை முன்­மொ­ழிந்­தார். கடந்த கால ஆட்­சி­யில் சபை­யின் நிதி தெரிந்தே இழக்­கப்­பட்­டமை தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று அவர் அதில் குறிப்­பிட்­டார்.

முன்­னர் ஆட்சி செய்த கட்சி சார் உறுப்­பி­னர் ஒரு­வர் நான் இங்கு எழுந்­த­மா­ன­மா­கக் குற்­றஞ்­சாட்­டு­கின்­றேன் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். எனி­னும் அந்த விட­யத்தை ஆவண ரீதி­யாக நிரூ­பிக்க முடி­யும்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்­த­மான யாழ்ப்­பா­ணம் நக­ரின் மத்­தி­யில் உள்ள கடைத் தொகு­தி­யின் மோல்­மா­டி­யில் இலக்­கம் 5 கடையை சபை­யின் அனு­மதி பெறாது முன்­னாள் முதல்­வர் தன்­னிச்­சை­யாக வழங்­கி­யுள்­ளார்.

2014ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு மே மாதம் வரை­யான காலப்­ப­கு­திக்­கான வாடகை மற்­றும் வரி, தண்­டம் உட்­பட 10 லட்­சத்து 16 ஆயி­ரம் ரூபா சபைக்­குச் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­தப் பணம் சபைக்­குச் செலுத்­தப்­ப­ட­வில்லை. இலக்­கம் 2 கடையை மகேஸ்­வரி நிதி­யத்­துக்கு வழங்­கி­ய­மைக்­காக 56 ஆயி­ரத்து 12 ரூபா நிலுவை உள்­ளது.

சங்­கி­லி­யின் வீதி­யில் உள்ள சபைக்­கான கட்­ட­டம் புல­னாய்­வா­ளர்­க­ளுக்­குக் கொடுப்­பட்­ட­தால் அந்­தக் கட்­ட­டத்­தில் இருந்த ஆரம்ப சுகா­தார நிலை­யம் 22 மாதங்­க­ளாக தனி­யார் வீடொன்­றில் வாடகை அடிப்­ப­டை­யில் இயங்­கு­கின்­றது. அதற்­காக மாதம் ஒன்­றுக்­குப் 13 ஆயி­ரம் ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் 2 லட்­சத்து 76 ஆயி­ரம் ரூபா வீண­டிக்­கப்­பட்­டுப்­பட்­டுள்­ளது.

இந்த மூன்று சம்­ப­வங்­க­ளுக்­கு­மான சான்று ஆவ­ணங்­கள் என் வசம் உண்டு. சபைக்கு ஏற்­பட்ட நட்­டம் மற்­றும் நிதி கிடைக்­காமை என்­ப­வற்­றால் 13 லட்­சத்து 48 ஆயி­ரத்து 12 ரூபா வீண­டிக்­கப்­பட்­டமை ஆவ­ணங்­கள் மூலம் உறு­தி­யா­கின்­றது. இது போன்ற வேறு சம்­ப­வங்­க­ளும் இருப்­பின் அவற்­றை­யும் கோரிப் பெற்று ஒரு வலு­வான குழுவை நிய­மித்து விசா­ரணை செய்து சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார். தன் வச­முள்ள ஆவ­ணங்­க­ளை­யும் சபை­யில் காண்­பித்­தார்.

முன்­னாள் மேய­ரும், தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான யோகேஸ்­வரி பற்­கு­ண­ராசா இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் நக­ரில் வழங்­கிய கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்த நிலை­யில் எவ­ரும் பயன்­ப­டுத்­தப்­ப­டாது இருந்­தது. வரு­மா­னம் ஈட்­டும் வகை­யில் அவை வழங்­கப்­பட்­டன. எமது சபை­யின் ஆட்­சிக்­கா­லம் வரை வாடகை செலுத்­தப்­பட்­டது. அதன்­பின்­னர் வாடகை பெறா­தது அலு­வ­லர்­க­ளின் தவறு.

சங்­கி­லி­யன் வீதி­யில் உள்ள கட்­ட­டம் புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. அந்­தப் பகு­தி­யில் கால் நடைத் திருட்டு இடம்­பெ­று­கின்­றது என்­றும் அதைக் கட்­டுப்­ப­டுத்த பொலிஸ் காவ­ல­ரண் ஒன்று அமைக்க வேண்­டும் என்று மாவட்­டக் குழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

அமைச்­ச­ராக இருந்த டக்­ளஸ் தேவா­னந்­தால் அந்­தப் பகு­தி­யில் உட­ன­டி­யாக ஒரு இடத்தை வழங்க வேண்­டும் என்று பணித்­தார். அந்த அடிப்­ப­யைில் பொலி­ஸா­ருக்­குக் கட்­ட­டம் வழங்­கப்­பட்­டது. புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்று அவர் தெரி­வித்­தார்.

பாது­காப்­புக்­கா­கப் பொலி­ஸார் இருந்­தார்­கள் என்­றார் பொலிஸ் பிரிவு என பெயர் பலகை மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டும். குறைந்­த­பட்­சம் அங்­கி­ருந்­த­வர்­கள் பொலிஸ் சீரு­டை­யி­லா­வது இருந்­தி­ருக்க வேண்­டும். அவ்­வாறு ஏதா­வது இருந்­ததா? என்று கேள்வி எழுப்­பி­னர் உறுப்­பி­னர் ந.லோக­த­யா­ளன்.
அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் சட்­டத்­த­ரணி வி.மணி­வண்­ணன் இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் கருத்­துத் தெரி­வித்­தார்.

இதை ஒத்த விட­யம் ஒன்­றைக் குறிப்­பிட வேண்­டும். யாழ்ப்­பா­ணம் கஸ்­தூ­ரி­யார் வீதி­யில் அமைக்­கப்­பட்ட கட்­ட­டத் தொகு­தி­யில் உள்ள 54 கடை­க­ளில் 32 கடை­கள் மட்­டும் நிபந்­த­னை­க­ளுக்கு அமைய விற்­பனை செய்­யப்­பட்டு மாந­கர சபை­யால் பொறுப்­பேற்­கப்­பட்டு அவற்­றின் வரு­மா­னம் சபைக்கு வரு­கின்­றது.

ஆனால் ஏனைய கடை­க­ளும் இயங்­கு­வ­தா­கவே தெரி­கின்­றது. அவற்­றின் ஒப்­பந்­த­கா­ரர் சபைக்கு இன்­னும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தா­கத் தெரி­ய­வில்லை. அப்­ப­டி­யா­னால் ஒப்­பந்­த­கா­ர­ரின் அனு­மதி இன்றி அந்­தக் கட்­ட­டம் எடுக்­கப்­பட்­டுள்­ளதா?. இது தொடர்­பில் வடக்கு மாகாண சபை ஒரு விசா­ர­ணையை நடத்­தி­யி­ருந்­தது. அதன் அறிக்கை கோரிப் பெற்று அந்த விவ­ரங்­களை வெளி­யிட வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

உறுப்­பி­னர் ந.லோக­த­யா­ள­னின் கோரிக்­கையை உறுப்­பி­னர் ப.தர்­சா­னந் வழி­மொ­ழிய தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் ஊடாக நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­யைப் பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று சபை முதல்­வர் தெரி­வித்­தார்.