tna seithi founder

A TNAUK Publication

நாம் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறவே மாட்டோம்; எதிர்க்கட்சித்தலைவர் விசேட செவ்வி

Administrator 2018-01-16 15:15:00

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக் ­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் சம்­பந்­த­மான விமர்­ச­னங்கள், கூட்­டாட்­சிக்குள் காணப்­படும் பிள­வுகள்,கூட்­ட­மைப்பின் மீது காணப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும், உள்­ளூ­ராட்சிமன்­றங்­க­ளுக்­கான தேர்தல், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேச­ரிக்கு விசேட செவ்­வியை வழங்­கினார்  அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு

கேள்வி:- தற்­போது காணப்­ப­டு­கின்ற அர­சியல் சூழலில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்கும் செயற்­பாடு முழு­மை­பெறும் என்­பதில் நீங்கள் எவ்­வ­ளவு தூரம் நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:-  புதிய அர­சி­ய­ல­மைப்பு இந்த நாட்­டிற்கு தேவை­யான ஒரு விட­ய­மா­கின்­றது. இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளுக்கும் தேவை­யான விட­ய­மா­கின்­றது. தமிழ் மக்­க­ளா­கிய எமக்கும் தேவை­யான விட­ய­மா­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பெறு­வ­தற்கு நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்து வரு­கின்றோம்.

அர­சியல் சாசன ரீதி­யாக 1987ஆம் ஆண்டு அதி­கா­ரங்­களை பகிர்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஊடாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அந்தக் கருமம் நீண்­ட­கால போராட்­டத்தின் பின்­ன­ரேயே நடை­பெற்­றி­ருந்­தது. அந்தக்கருமம் நடை­பெ­று­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இந்­தி­யாவின் பங்­க­ளிப்பே காணப்­பட்­டது.

அதன் பின்னர் அர­சியல் சாச­னத்­தை திருத்தி ஆட்சி முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முயன்­ற­போதும் அவை எவை­யுமே கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. குறிப்­பாக இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13 ஆவது அர­சியல் சாசன திருத்தத்தின் பின்னர் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ஸாவின் காலத்தில் மங்­கள முன­சிங்க தெரி­வுக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க அம்­மை­யாரின் காலத்தில் அர­சியல் சாசன திருத்த யோச­னைகள், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒஸ்லோ பேச்­சுக்கள், பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சி­க்கா­லத்தில் அவரால் நிய­மிக்­கப்­பட்ட  சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழு, பல்­லின நிபுணர் குழு,  திஸ்­ஸ ­வி­தா­ர­ணவின் சர்­வ­கட்சி குழு அறிக்கை போன்ற விட­யங்கள் எல்லாம் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் கூட அவை கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. இவை­யெல்லாம் அதி­கா­ரப்­ப­கிர்வை மேன்­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்­சிகள்.

இதன் கார­ண­மாக அர­சியல் சாசன ரீதி­யாக உறு­தி­யான மாற்­றங்கள் இடம்­பெ­ற­வில்லை. 1988ஆம் ஆண்­டுக்கு பின்­ன­ரான முப்­பது வரு­டங்­களை பார்க்­கின்­ற­போது, அர­சியல் சாசனம் திருத்தி அமைக்­கப்­பட வேண்டும். ஆட்சி ஒழுங்­கு­களில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும், அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்­பதை நாட்­டிற்கு தலைமை தாங்­கிய அத்­தனை ஜனா­தி­ப­தி­களும். அர­சு­களும்  ஏற்­றுக்­கொண்டு அதனை நோக்கி செயற்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் அதற்­கான சந்­தர்ப்பம் கைகூ­டி­யி­ருக்­க­வில்லை.

அவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி மைத்திரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஒரு ­ப­கு­தி­யி­ன ரும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் முதன்­மு­றை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்ற சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்­துள்­ள­தோடு, நாம் உள்­ளிட்ட சிறு­பான்மை கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புக்­க ளும் கிடைக்கும் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்ள நிலையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெறக்­கூ­டிய ஏது­நி­லைகள் உள்­ளன.

அதனைக்கவ­னத்தில் கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான கரு­மத்­தினை நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாயத்தேவை உள்­ள­தா­கவே நான் கரு­துகின்றேன். தற்­போ­தைய தலை­வர்­க­ளான மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் அர­சியல் சாசன திருத்தம் ஏற்­பட வேண்டும் என்று கடந்த காலத்தில் பல்­வேறு முயற்­சி­களில் பங்­கேற்­றுள்­ளனர்.

குறிப்­பாக சந்­தி­ரிகா குமா­ர­துங்க அம்­மை­யாரின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சி
யல் சாசன திருத்த விட­யத்தில் அவ­ரு­டைய அமைச்சில் மூத்த அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரிய பங்­க­ளிப்­பினைச் செய்­தி­ருந்தார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இந்த விட­யத்­திற்­காக தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் யுத்த நிறுத்த ஒப்­பந்­தத்­தினைச் செய்து முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

அந்த வகையில் அவர்கள் இரு­வருமே அர­சியல் சாசன விட­யத்­தினை கையாண்டு அதில் ஈடு­பாட்­டுடன் செயற்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அவ்­வா­றான இரு­வரும் ஒன்­றாக இணைந்து அர­சியல் சாசனம் சம்­பந்­த­மாக முயற்­சி­களை முன்­னெ­டு­க்கின்­ற­போது நாம் அம்­மு­யற்­சியில் நம்­பிக்கை கொள்ள வேண்­டி­ய­தா­கின்­றது.

கேள்வி:- முயற்­சியும் நம்­பிக்­கையும் அவ­சி­ய­மாக இருக்­கின்­ற­போதும் தற்­போ­தைய கூட்­டாட்சி கட்­சிகள் சார்ந்து காணப்­ப­டு­கின்ற உள்­ளக முரண்­பா­டு­களைத்தாண்டி புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தில் அதி­க­ளவு அக்­கறை கொள்­வார்­களா?

பதில்:- கூட்­டாட்­சிக்குள் முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. முரண்­பா­டுகள் இல்­லாது எமது விட­யத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி புதிய அர­சியல் சாசன விட­யத்­தினை முன்­னெ­டுப்­பார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. எவ்­வி­த­மான முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­போதும் 2015 ஆம் ஆண்டு அதி­கா­ரத்­திற்கு வந்­த­வர்கள் 2016 இல் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டது.

21 பேர் அடங்­கிய வழி­ந­டத்தல் குழு உரு­வாக்­கப்­பட்­டது. அந்த குழு 70 தட­வைகள் வரையில் கூடி­யி­ருந்­தது. பல விட­யங்­களைப் பற்றி ஆலோ­சிக்­கப்­பட்­டது. நிபு­ணர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. பொது­மக்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டன. ஆறு உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அவற்றின் அறிக்­கைகள் பெறப்­பட்டு இன்­னு­மொரு உப­கு­ழுவின் அறிக்­கையும் பெறப்­பட்டு அவற்றின் அறிக்­கைகள் எல்லாம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. பின்னர் எழுத்து மூல­மான இடைக்­கால அறிக்கை வழி­காட்டல் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு சபையில் விவா­தங்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையில் கட்சி அர­சியல் என்­பதன் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­போதும் புதிய அர­சியல் சாச­னத்­திற்­கான முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ளன. சிலர் இச்­செ­யற்­பாட்­டினை தடுக்க முயன்­ற­போதும் அத­னைக்­க­டந்து கரு­மங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் காலம். தேர்தல் நிறை­வ­டைந்­த­வுடன் மேலும் தாம­த­மின்றி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் இடம்­பெற்று இறுதி அறிக்­கை­யொன்று விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று எதிர்­பார்­க்கின்றேன்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் பல விட­யங்கள் தங்­கி­யி­ருக்­கின்­றன. தேர்தல் முடி­வு­களின் பின்னர் சரி­யான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­ற­போது அர­சியல் சாசன விடயம் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­மைக்­கான சந்­தர்ப்பம் காணப்­ப­டு­கின்­றது.

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் தற்­போது ஒரு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறு ஏற்­பட்­டுள்ள ஒரு சந்­தர்ப்­பத்­தினை எமது கவ­ன­யீ­னத்தின் கார­ண­மா­கவோ அல்­லது ஒத்­து­ழைப்­பின்­மையின் கார­ண­மா­கவோ முன்­னெ­டுக்க முடி­யாது போனது என்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக முடி­யாது.

கேள்வி:- இணைந்த வட­கி­ழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி முறை­மையை பெறு­வ­தன் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான நிரந்தர தீர்­வினைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­ப­தற்கே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு மக்கள் ஆணை வழங்­கி­யுள்ள நிலையில் தற்­போது வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை அந்தக் கோட்­பா­டு­களை பிர­தி­ப­லிக்­காத வகையில் அல்­லவா உள்­ளது?

பதில்:- இந்த நாட்டில் ஒவ்­வொரு இனக்­கு­ழுவையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் குழுக்­க­ளுக்கும் ஒவ்­வொரு கொள்­கைகள் இருக்­கின்­றன. உலக அரங்கில் அனைத்து நாடு­க­ளிலும் இவ்­வி­த­மான நிலை­மை­களே உள்­ளன. தந்தை செல்­வாவின் காலத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட போது இந்த நாட்டில் உள்ள பன்­மு­கத்­தன்­மையை மனதில் கொண்டு ஒரு சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்சி ஏற்­ப­ட­வேண்டும் என்ற கருத்­தினை முன்­வைத்தார்.

பல மொழி, மதம், இனம், கலா­சா­ரங்­களைக் கொண்ட நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை­மை­யா­னது ஏற்­ப­ுடை­ய­தொன்­றா­கின்­றது. அந்த வகை­யி­லேயே தந்தை செல்வா சமஷ்டிக் கோரிக்­கையை முன்­வைத்தார். அத­னை­நோக்கித் தான் பய­ணித்­துக்­கொண்­டி­ரு­கின் றோம். 13 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது எமது உரி­மை­களைப் பெறு­வ­தற்­கான பய­ணத்தில் 40ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே அர­சியல் சாசன ரீதி­யாக அதி­கா­ரங்­களை மாகாண மட்­டத்தில் பகிர்ந்து ஆட்சி ஒழுங்கு­களில் மாற்­றங்­களை கொண்டு வரக்­கூ­டிய நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தன.

அது­வ­ரையில் நாம் மாவட்ட சபை­களைப் பெறு­வ­தற்கு கூட முடி­யா­தவர்­க­ளாக இருந்து வந்தோம். நீங்கள் குறிப்­பிட்­டதன் பிர­காரம் தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி என்ற சொற்­பதம் காணப்­ப­ட­வில்லை. ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி ஸ்ரேட் என்ற சொற்­பதம் இல்லை. ஆனால் சிங்­க­ளத்தில் ஏகிய ராஜ்ய என்ற சொற்­பதம் காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு சிங்­கள மொழியில் ஏகிய ராஜ்ய என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு காரணம் என்­ன­வெனில், சிங்­கள மக்கள் நாடு பிரி­வதை ஏற்­றுக்­கொள்ள­வில்லை. அவ்­வாறு சிங்­கள மக்­க­ளிடம் நாடு பிரி­வ­டை­யாது என்ற நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பி அவர்­களை ஏற்­றுக்­கொள்ள வைக்க வேண்­டு­மென்றால் ஏகிய ராஜ்ய என்ற சொற்­ப­தத்­திற்கு அவர்கள் அளிக்கும் முக்­கி­யத்­துவம் உண­ரப்­ப­ட­ வேண்டும். 

ஆகவே சிங்­கள மக்­களை ஏற்­றுக்­கொள்ள­ வைப்­ப­தற்­காக அந்த சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டாலும் ஏகிய ராஜ்ய என்ற சொற்­ப­தத்­திற்கு உண்­மை­யான தெளி­வான விளக்­கத்­தினை அர­சியல் சாச­னத்­தி­லேயே வழங்க வேண்டும் என்­பதை நாம் வலி­யு­றுத்­தி­ய­போது அதனை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டார்கள்.

ஏகிய ராஜ்ய என்ற சொற்­ப­தத்­திற்கு நாடு பிரி­ப­டாத பிரிக்­க­மு­டி­யாத ஒரு­மித்த நாடு என்று அர­சியல் சாச­னத்தில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு ஆட்சி முறைமை சம்­பந்­த­மாக எது­வுமே சொல்­லப்­ப­டவில்லை. ஆகவே ஏகிய ராஜ்ய என்று குறிப்­பிட்டு அதற்கு பிரி­ப­டாத பிரிக்­க­மு­டி­யாத ஒரு­மித்த நாடு என்று விளக்கம் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அது பாத­க­மான சொற்­பி­ர­யோகம் அல்ல. சாத­க­மான சொற்­பி­ர­யோ­க­மா­கவே பார்க்க வேண்டும்.

எதிர்­கா­லத்தில் உயர்­நீ­தி­மன்­றத்தில் அர­சியல்  சாசனம் சம்­பந்­த­மாக வழக்கு தொடர்ந்­தாலும் ஏகிய ராஜ்ய என்ற சொற்­ப­தத்­திற்கு அர­சியல் சாச­னத்­தி­லேயே விளக்கம் அளிக்­கப்­பட்­டி­ருப்­பதால் அச்சம் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை.

இதனை விட இடைக்­கால அறிக்­கையில் காணப்­படும் ஆட்­சி­மு­றைமை தொடர்­பான விட­யங்­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். குறித்த அறிக்­கையில் தேசி­யப்­பட்­டியல், மாகாணப்பட்­டியல், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பட்­டியல் என தனி­த்­த­னி­யாக பட்­டி­யல்கள் காணப்­பட வேண்டும். அந்­தந்த பட்­டி­யலில் கூறப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களின் பிர­காரம் அந்­தந்த மட்­டங்­களில் உள்ள ஆட்­சி­பு­ரியும் அமைப்­புக்கள்  அவற்றை கையா­ளு­கின்ற நிலை­மைகள் ஏற்­பட வேண்டும்.

மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்கள் பிரிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதன் பிரகாரம் மூன்று மட்­டங்­களில் மக்கள் தமது இறை­மையின் அடிப்­ப­டையில் அந்­தந்த மட்­டங்­களில் உள்ள அர­சி­ய­ல­மைப்­புக்­க­ளுக்கு அவர்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் ஊடாக சட்­டத்­தினை ஆக்கும் அதி­காரம், நிரு­வாக அதி­காரம் உள்­ளிட்ட அதி­கா­ரங்­களை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள அதி­கார வரம்­புக்குள் கையா­ளப்­போ­கின்­றார்கள்.

மூன்று மட்­டங்­களில் உள்ள அதி­கா­ரங்­களை மக்கள் தமது இறை­மையின் அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்­து­கின்­ற­போது அவர்­களின் உள்­ளக சுய­நிர்ண உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதுதான் எமது கட்­சியின் அடிப்­ப­டைக்­கொள்கை. இதுதான் சமஷ்­டியின் அடிப்­ப­டை­யாகும்.

இதற்கு மேலாக இடைக்­கால அறிக்­கையில், 'Sri LaInka (இலங்கை) அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு தத்­து­வங்­களை பிர­யோ­கிப்­ப­தற்கு ஏற்­பு­டை­ய­தான மத்திய மற்றும் மாகா­ணங்­களில் நிறு­வ­னங்­களை கொண்­டுள்ள சுதந்­தி­ரமும் இறை­மையும், தன்­னா­திக்­கமும் கொண்­டுள்ள ஏகிய ராஜ்­ய/­ஒ­ரு­மித்த நாடு எனும் குடி­ய­ர­சாகும்' என்று கூறப்­பட்­டுள்­ளது. இதி­லி­ருந்து, அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு தத்­து­வங்­களை பிர­யோ­கிப்­ப­தற்கு மத்­தி­யிலும் மாகா­ணங்­க­ளிலும் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு உரித்து உள்­ள­தென்­பது தெளி­வா­கின்­றது.

சமஷ்டி என்ற சொற்­பதம் மட்­டுமே இடைக்­கால அறிக்­கையில்  இல்லை. அதற்­காக சமஷ்­டிக்­கான கட்­ட­மைப்பு இல்­லை­யென்று கூறி­வி­ட­மு­டி­யாது. உதா­ர­ண­மாக இந்­திய அர­சி­ய­ல­மைப்­பினை எடுத்­துக்­கொண்டால் அங்கு சமஷ்டி என்ற சொற்­பதம் இல்லை. ஆனால் மாநி­லங்­க­ளுக்கு சட்­டத்­தினை ஆக்கும் அதி­காரம், நிர்­வாக அதி­காரம் போன்ற அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. முத­ல­மைச்சர், அவ­ரு­டைய அமைச்­ச­ரவை மாநி­லச்­சபை உறுப்­பி­னர்கள்  ஆகியோர் அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். சமஷ்டி என்ற சொற்­பதம் இல்லை என்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் இல்லை என்று யாரும் கூற­வில்லை. 

அதே­நேரம் அர­சியல்சாச­னத்தின் இறுதி வடிவம் இன்­னமும் தயா­ரா­க­வில்லை. இறுதி வடிவம் விரைவில் வர­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இறுதி வடிவம் வரும் வரையில் இடைக்­கால அறிக்­கையை நாம் பரி­சீ­லிப்போம். எமது மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வினை வழங்கும் வகை­யி­லான இறுதி வடி­வத்­திற்­காக முயற்­சிக்க வேண்­டி­யது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டையில் எமது கட­மை­யா­கின்­றது. அதனை உதா­சீனம் செய்ய முடி­யாது.  அடுத்த­தாக வடக்கு, கிழக்கு இணைப்பு விட
யம்.  வடக்கு, கிழக்கு  இணைப்­பினைப் பெறு­வதற்­காக நாம் மிகக்­க­டு­மை­யாக உழைத்­தி­ருந்தோம். இந்­திய அர­சாங்­கத்தின் தலை­யீட் டின் கார­ண­மாக இந்த இணைப்பு இடம்­பெற்­ற­போதும் துர­திர்ஷ்ட வச­மாக சர்­வ­ஜ­ன­ வாக்­கெ­டுப்பு எடுக்க வேண்டும் என்ற கருத்தும் உள்­வாங்­கப்­பட்­டது. தற்­போ­தைய சூழலில் சர்­வ­ஜ­ன ­வாக்­கெ­டுப்­பொன்று நடை­பெ­று­ மாக இருந்தால் கிழக்கு மாகா­ணத்தின் முடிவு எவ்­வி­த­மாக அமையும் என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­னது.

வட­கி­ழக்கு இணைப்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடாக பாத­க­மான முடிவு வரு­வ­தனை நாம் விரும்­ப­வில்லை. வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்­ட­போது எமக்கு வாக்­கு­று­தி­யொன்று அளிக்­கப்­பட்­டது. அந்­த­வாக்­குறுதி என்ன­வென்றால், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு  நடை­பெ­றாது என்றும் முஸ்லிம் மக்­களும் ஏனை­ய­வர்­களும்  ஏற்­றுக்­கொள்ளும் வகையில் இந்த விடயம் தீர்க்­கப்­படும் என்­ப­தாகும். மேலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் பங்­கு­பற்­று­வ­தற்கு குடி­பெ­யர்ந்த மக்கள் அனை­வ­ருக்கும் உரிமை இருக்கும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை பிற்­போ­டு­வ­தற்கு ஜனாதி­ப­திக்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு 18 வரு­டங்­க­ளாக பிற்­போ­டப்­பட்­டது.

அந்த அடிப்­ப­டையில் எமக்கும் மறைந்த தலைவர் அஷ்­ரப்­பிற்கும் இடையில்  பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. சில ஒப்பந்­தங்­களைக் கூட நாம் மேற்­கொண்­டுள்ளோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவர் தற்­போது இல்லை. இதனை முன்­னெ­டுத்த இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்தி கொலை­செய்­யப்­பட்டு விட் டார். தற்­போ­தைய நிலையில் முஸ்­லிம்­களின் ஒத்­து­ழைப்பை இந்த விட­யத்தில் பெறு­வது சிறந்த வழி­மு­றை­யாகும். அதே சமயம் வடக்கு–கிழக்கு இணைப்பில் நடை­முறை ரீதி­யாக தவ­றி­ழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத உயர் நீதி­மன்ற தீர்ப்­பொன்றும் வெளி­வந்­தி­ருக்­கி­றது. 

நாம் வடக்கு–கிழக்கு இணைப்பு விட­யத்­தினை கைவி­ட­வில்லை. தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையில் 1978 ஆம் ஆண்டு அர­சியல் சாச­னத்தில் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு அமை­வாக, வடக்கு கிழக்கு இணை­வ­தென்றால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டலாம். வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டாது இணைக்­கப்­ப­டலாம். அல்­லது இணைக்­கா­மலும் விட­மு­டியும் ஆகிய மூன்று விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  ஆகவே வட­கி­ழக்கு இணைப்பு என்­பது கையா­ளப்­பட வேண்­டிய விட­ய­மா­கின்­றது. அந்த விடயம் சம்­பந்­த­மாக கார­சா­ர­மாக தற்­போது கருத்­துக்­களை வெளி­யிட முடி­யாது. அதனை நிதா­ன­மா­கவும் பக்­கு­வ­மா­கவும் கையாள வேண்டும்.

கேள்வி:- இடைக்­கால அறிக்­கையில் இறை மை மக்­க­ளுக்­கு­ரி­ய­தாக இருப்­ப­தோடு பர­ாதீ­னப்ப­டுத்­த முடி­யா­ததா­கவும், பிரிக்­க­மு­டி­யா­த­தா­கவும் இருத்தல் வேண்டும் என்­று­ கூ­றப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யா­னது ஒற்றை ஆட்­சியை மேலும் வலுவாக்­கு­கின்ற ஒரு விட­ய­மா­கின்­ற­தல்­லவா? அதே­போன்று மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பர­வ­லாக்கம் செய்­வ­தாக கூறி­னாலும் செனட்­சபை அல்­லது இரண்­டா ­வது சபை உரு­வாக்­கத்தின் மூலம் அவை மீண்டும் மத்­தியின் பிடிக்குள் அல்­லவா செல்­கின்­றது?

பதில்:- நீங்கள் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இறைமை என்­பது என்­ன­வென்று பார்த்தால் ஆட்சி அதி­கா­ரங்கள், வாக்­க­ளிக்கும் உரிமை, அடிப்­படை உரிமை என்­ப­ தாகும். ஆட்சி அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்­றது. வாக்­கு­ரிமை தேசிய, மாகாண, உள்­ளூராட்சி மட்­டங்­களில் காணப்­ப­டு­கின்­றன. ஜன­நாயக உரிமை மூன்று மட்­டங்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அடிப்­படை உரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இங்கு ஒற்றை ஆட்­சியை வலுப்­ப­டுத்­து­வ­தாக அமை
­ய­வில்லை.

அவ்­வா­றான நிலையில் இரண்­டா­வது சபையில் ஒவ்­வொரு மாகா­ணத்­தி­னையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் தலா ஐவரும் பாரா­ளு­மன்­றத்­தினால் தெரிவு செய்­யப்­படும் 10 பிர­தி­நி­தி­களும் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மாக சில மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தென்றால் அது பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லிரண்டு பெரும்­பான்­மையால் நிறை­வேற்­றப்­ப­டு­வது மாத்­தி­ர­மல்ல இரண்­டாவது சபை­யிலும் மூன்­றி­லிரண்டு பெரும்­பான்­மையால் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

அத்­துடன் இரண்­டா­வது சபை­யில் குறைந்த மக்கள் வாழும் மாகா­ணத்­திற்கும், கூடிய மக்கள் வாழும் மாகா­ணத்­திற்கும் ஒரே­ய­ள­வான பிர­தி­நி­தித்­து­வமே வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே இரண்­டா­வது சபையை தனிப்­பட்ட ரீதியில் இன­ரீ­தி­யாக மட்­டுமே பார்க்க முடி­யாது. அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மாக பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்ட போது, வட கிழக்கை தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­களின் முத­ல­மைச்­சர்கள் அதி­கா­ரப்­ப­கிர்வை மிகவும் கூடு­த­லாக கோரு­ப­வர்­க­ளாக தென்­பட்­டார்கள்.

அவர்கள் தங்கள் மக்கள் சார்பில் அதி­கா­ரப்­ப­கிர்வின் தேவையை உணரத் தொடங்கி விட்­டார்கள். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் அதி­கா­ரப்­ப­கிர்வு அதி­யுச்­ச­மாக கிடைக்க வேண்டும் என்­பதே முக்­கி­ய­மா­கின்­றது. அதன் பிரகாரம் இரண்­டா­வது சபை மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது என்­பது தவ­றான பார்­வை­யாகும்.

மேலும் அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மாக மாற்­றங்கள் நடை­பெ­று­வ­தாக இருந்தால் அந்­தந்த மாகாண சபையின் பிர­தி­நி­தித்­து­வங்கள் தமது நிலைப்­பா­டு­களை எவ்­வி­த­மாக வெளிப்­ப­டுத்­தலாம் என்­பது தொடர்­பா­கவும் தற்­போது ஆலோ­சிக்­கப்­ப­டு­கின்­றது. அது சம்­பந்­த­மாக இன்­னமும் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆட்சி அதி­கா­ரங்­களை மாற்­று­கின்­ற­போது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை மற்றும் செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆகி­ய­வற்­றுடன்தான் மேற்­கொள்ள வேண்டும் என்ற கருத்­துக்­களும் தற்­போ­துள்­ளன.

இதில் கூறப்­ப­ட­வேண்­டிய இன்­னு­மொரு விடயம் என்­ன­வென்றால், அதி­கா­ரப்­ப­கிர்வு ஒழுங்­கு­களை பொறுத்­த­வ­ரையில், அந்த ஒழுங்­குகள் சம்­பந்­த­மாக மாற்­றங்கள் செய்­வ­தாக இருந்தால் அல்­லது பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீது மத்தி அதி­காரம் செலுத்­து­வ­தாக இருந்தால் அல்­லது அதி­கா­ரங்­களை மீளப்­பெ­று­வ­தாக இருந்தால் அவற்றை மத்­திய அர­சாங்கம் தன்­னிச்­சை­யாக செய்ய முடி­யாது.

இவ்­வி­த­மான கரு­மங்­களை மத்­திய அர­சாங்கம் தன்­னிச்­சை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமல் இருப்­பது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஒரு அம்சம். பாரா­ளு­மன்­றத்தின் சட்ட சபை­யிலும் செனட் சபை­யிலும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெறு­வதன் மூலமே இவ்­வி­த­மான மாற்­றங்­களை செய்ய முடியும் என்­ப­தோடு இதற்கு மேல­தி­க­மாக எவ்­வி­த­மான பாது­காப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தற்­போது பரி­சீ­ல­னையில் உள்­ளது.

ஒவ்­வொரு மாகா­ணத்திலுமுள்ள ஐந்து செனட் சபை உறுப்­பி­னர்­களில் மூன்று பேரா­வது இதனை அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்­பது தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஒரு ஆலோ­சனை. இது போது­மா­னதா என்பது தற்­போது விவா­திக்­கப்­ப­டு­கின்ற ஒரு விட யம். ஆதலால் அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மான ஒழுங்­குகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மத்தி பயன்­ப­டுத்­துதல் அதி­கா­ரங்­களை மீளப்­பெ­றுதல் போன்ற விட­யங்கள் தொடர்­பாக அவை நடை­பெ­று­வதை தடுப்­ப­தற்கு அல்­லது கடி­ன­மாக்­கு­வ­தற்கு ஒழுங்­குகள் உள்­வாங்­கப்­பட வேண்டும்.  இது ஒற்­றை­யாட்­சிக்கு ஏற்­பு­டை­ய­தல்ல. மாறாக இது சமஷ்டி முறை­யி­லான ஒழுங்­காகும்.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் பல ­க­ருத்­துக்­களை கூற­மு­டியும். விவா­திக்க முடி
யும். ஒட்­டு­மொத்­த­மாக வரப்­போ­கின்­ற­வி­டயம் எமது இலக்­குகளை நோக்கிச் செல்­வ­தற்கு எந்­த­ள­விற்கு சாதக­மாக இருக்­­கப்­போ­கின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும். எழு­பது ஆண்­டு­க­ளாக எத்­தனித்­தி­ருக்­கின்றோம். சந்­தர்ப்­பங்­களை இழந்­தி­ருக்­கின்றோம். தற்­போ­துள்ள சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்­துவோம். பிர­யோ­ச­ன­மற்ற­வொன்றை நாம் ஏற்­கப்­போ­வ­தில்லை. அது சம்­பந்­த­மாக எவரும் எமக்கு போதிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

கேள்வி:- 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்த வேளை­யோடு இலங்கை வந்­தி­ருந்த அப்­போதைய இந்­திய மத்­தி­ய அ­ரசின் பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­யணன் மற்றும் சிவ்­சங்கர் மேனன் ஆகியோர் உங்­க­ளு­ட­னான சந்­திப்பில் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை மையப்­ப­டுத்தி தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக ஏற்­றுக்­கொள்­ளு­மாறு அழுத்­த­ம­ளித்­தார்­களா?

பதில்:- இந்­திய–இலங்கை ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக 1986 ஆம் ஆண்டு ஆடி, ஆவணி மாதங்­களில் எமக்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் இடையில் நீண்ட பேச்­சு­வார்த்தைகள் நடை­பெற்­றன. அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்
­தன, பிர­தமர் ரண­சிங்க பிரே­ம­தாஸ (ஒரு­நாளே பங்­கேற்றார்) ரொனி டிமெல், லலித் அத்­து­லத்­மு­தலி, காமினி திஸா­நா­யக்க, தேவ­நா­யகம், ஏ.சி.எஸ்.ஹமீட், ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் அர­சாங்­கத்­த­ரப்பில் பங்­கேற்­றனர்.

தமிழ்த் தரப்பில் அண்ணன் அமிர்­த­லிங்கம், சிவ­சி­தம்­பரம், நீலன் திருச்­செல்வம், யோகேஸ்­வரன், ஆனந்­த­சங்­கரி, ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் மற்றும் நான் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்தோம். ஒன்­பது வரை­வுகள் குறித்து நாம் பேசினோம். அதன் பின்னர்தான் 13ஆவது அர­சியல் சாசன திருத்தம் உரு­வாக்­கப்­பட்­ டது. 13 ஆவது அர­சியல் சாசன ஏற்­பாடு எமது முழு­மை­யான சம்­ம­தத்து டன் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் ஒரு வடிவம் பெற்­றது.

அது சட்­ட­மாக்­கப்­பட்­ட­போதும் நாம் அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. பிர­தமர் ராஜீவ் காந்திக்கு அண்ணன் அமிர்­த­லிங்கம் சிவசிதம்­பரம் மற்றும் நான் ஆகிய மூவரும் கையொப்­ப­மிட்டு இலங்கை அர­சாங்­கத்தின் 13 ஆவது அர­சியல் சாசன திருத்த சட்­டத்­தையும் மாகாண சபை­களின் சட்­ட­தையும் கார­ணங்­களை சுட்டிக் காட்டி ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என 1987 ஆம் ஆண்டு  ஐப்­பசி மாதம் 28 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தோம்.

நாம் அப்­பொ­ழுது நடை­பெற்ற மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை. அதற்­காக நாம் அதனை முழு­மை­யாக உதா­சீனம் செய்­யவும் இல்லை. அந்த ஏற்­பாடு பெறு­ம­தி­யற்­றது என்று கூறாது விட்­டாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் பல­வி­த­மான சிக்­கல்கள் காணப்­பட்­டன. 13 ஆவது திருத்தம் போது­மா­ன­தாக இல்லை என்­பதைப் பற்றி எமக்கு யாரும் போதிக்க வேண்­டி­யதில்லை. அதனை நாம் நன்கு அறிந்­து­கொண்­டுள் ளோம்.

ஆனால் முதன் முத­லாக அர­சியல் சாச­னத்தில் அதி­கா­ரப்­ப­கிர்வு சம்­பந்­த­மான  மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்த 13ஆவது திருத்தம்தான் தற்­போதும் அத்­தி­வா­ர­மாக இருக்­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் இந்­திய மத்­தி­ய­ரசின் பாது­காப்பு ஆலோ­சகர் நாரா­ய­ணனும் வெளி­வி­வ­கார செய­லாளர் சிவ்­சங்கர் மேனனும் இலங்கை வந்­தார்கள். அவர்­களை இந்­திய தூதுவர் இல்­லத்தில் சந்­தித்­தி­ருந்தோம். அது உண்­மை­யான விடயம்.

அந்த சந்­திப