tna seithi founder

A TNAUK Publication

சமஷ்டி அடிப் படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம்

Anonymous 2018-03-16 08:00:00

( ஐ.தி.சம்பந்தன்)

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப் படையிலான அரசியல் தீhவு ஒன்றை ஒருமுக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன. தென் இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில்70 வீதமான சிங்கள மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிங்கள மக்களையும் சிங்கள நாட்டையும் முன்னேற்றி வருவதை அணைவரும் அறிவீர்கள். தமிழ் மக்கள் எல்லா வழிகளிலும்; இனரீதியாக ஒதுக்கப்பட்டு வருவதை அறிவீர்கள்.

எமது அடிப்படை உரிமைகளைப் பொறுவதற்கு அகிம்ஷை வழியிலும், ஆயுதப் போராட்ட வழியிலும் கடந்த 60 வருடங்களாக தீவிரமா போரா டியும் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதைத் தொடர்ந்து கடந்தமூன்று வருடங்களாக ராஜதந்திர ரீதியான போராடம நடந்து வருகிறது. ஒரு அரசியல் தீர்வு நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் இருக்;கும் தமிழ்த் தலைமைக உள்ளுராட்சித் தேல்தல் முடிவால் தென்இலங்கையில் ஏற்படும் அரசியல் மாற்றம் அரசியல் தீர்வுக்கு பாதகம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தேசிய உணர்வு கொண்ட தமிழ் மக்களும் தமிழ்க் கட்சிகளும் ;ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்படையில் ஒரு அரசிளல் தீர்வை முன்வைத்து போரடுவதற்கு இத்தேர்தல் வழிவகுத்துள்ளது, வடகிழக்கை வலுமையான முறையில் ஆழுவதற்கு நாம் ஒன்றுபடவேண்டும். ஒற்றுமையே தமிழர்களின் பலம்

இலங்கை சுதந்திம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 70 வீதமான சிங்களப் பெரும்பாண்மையைக் கொண்ட சிங்களத் தலைமைகள் 1948லிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சிங்களச் சமூகத்தையும் சிங்களப் ;பிரதேசத்தையும் முன்னேற்றி வருவருதையும் அணைவரும் அறிவீர்கள்.

பிரித்தானிய அரசு நாட்டைவிட்டு 1948ல் வெளிNயுறிய போது பிரித்தானியாவில் உள்ளது போன்ற ஒற்றையாட்சி முறையை அறிமுகம் செய்து சிங்கள மக்களைப் பலப்படுத்தியதே தமிழத்தேசிய இனத்pற்கு ஏற்பட்ட அழிவாகும்

இந்த ஒற்றை ஆட்சி தமிழர்களுக்கு அழிவைத்தரும் என்று உணாந்த தந்தை செல்வா 1949ல் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்து சமஷ்டி முறையிலான ஆட்சிக்கு போராடி வந்தார். அன்று 50க்கு 50 கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமஷ்டிக் கொள்கையை ஏற்று தந்தை செல்வாவுடன இணைந்து போராடியிருந்தால சிங்கள அரசு வழிக்கு வந்திருக்கும். மாறாக சிங்கள அரசில் அமைச்சராகி வடகிழக்கில் உருவாக்கிய தொழிற்சாகைளும் இன்று அழிந்துவிட்டன. வடகிழக்கில்

நிரந்தமான ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் எதுவும் சாத்தியப்படாது. இந்த நிலைப்பாட்டைஉணர்ந்த {ஜீ.ஜீ. போன்னம்பலத்தின் பேர்ன் திரு.கஜேந்திர குமார் சமஷ்டி முறையிலான ஆடசியை ஏற்றுக்கொண்டார். ஆனால் சமஷ்டிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தமிழ்கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்குப பின் வாங்குவதேன். தமிழர்களின் இன்றைய நிலையை உணர்ந்த தமிழத் தெசியவாதியாகவிருந்தால் அவரது பாட்டனார் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம்; தந்தை செல்வாவுடன் இணைந்து வட்டுக் கோட்டை மாநாட்டில் தழிழ் ஈழக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது போல் ஏன் திரு. கஜேந்திர குமார் தமிழ் கட்சிகளுடன் இணையககூடாது. புலம்பெயர் நாடுகளிலுள்ள சில தமிழ் அமைப்பளின் வழி நடத்தலா.

1972ல் இலங்கை அரசு பாராளுமன்றத்தின் சிங்களப் பெரும்பான்மை;; பலத்துடன் தான் வரும்பிய ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தை நிறைவேற்றியதோடு சிறுபான்மையோரின் பாதுகாப்pற்கா பிரித்தானிய அரச வழங்கிய 29வது சட்ட விதியையும் நீக்கி தமிழர்களை அனாதைகளாக்கினர். அரச ஊழியரான திரு.கோடீஸ்வரன் அரசுக்கெதிராக தாக்கல் செய்த வழக்கு பிரித்தானிய பிவுக் கவுன்சிலில் வெற்றி பெற்ற நிலையில் அரசியல் சட்டத்தில் 29வது சரத்து நீக்கப்பட்டதால் கோடீஸ்வரன் வழக்கு தொல்வியில் முடிந்தது.

அதனால் பெரும் தொகையான அரச ஊழியர்கள அரச பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மேலு;ம் சிங்களம் மட்டும் சட்டத்தால் பொரும்தொகையான தமிழ் ஊழியர்கள் அரச சேவைவிட்டு விலகவேண்டிய நிலை. 29வது சட்ட நீக்கத்தால ;தமிழர்களுக்கான விகிதாசார நியமனங்களும் மறுக்கப்பட்டன.

இலங்கை சுதந்திரம் அடையும ;போது அரசசேவையில் 24 வீதமான தமிழர்கள் சேவையிலிருந்தனர். இன்று 5 வீத்திற்கு வந்தவிட்டன. அந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு வருகினற்ன. ஓரளவுமுஸ்லீம் மக்களுக்கும் வழங்கப்படுகின்றன. சிங்கள அரசின் இன ஒதுக்கள் இது. இவ்வாறு எல்லாத் ;துறைகளிலும்; தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இன ஒதுக்கள்களை பாராளு மன்றத்தில் கேள்விகளாக எழுப்பி சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால் எமது தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அக்கறை காட்டுவதாகவில்லை. இவர்கள் நாடாளு மன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கு ஆதாரமாக ' 'தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்' என்று ஒரு நூலை வெளியிட்டு உதவியிருந்தும் இவர்கள் அக்கறை எடுக்க வில்லை. அவ்வாறு நாடாளுமன்றததில் கேள்விகள் கேட்பதறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ இரத்தினம் போன்ற் ஒருவர் பிறக்கவேண்டும். இப்படியான கேள்விகளை எழுப்பி நல்லாட்சிக்கு தலையிடி கொடுத்தால் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனையை ஓரளவு தீர்க்கலாம். அன்று பண்டிதா அவர்களின் கேள்விகளினால் உயர் அரச பதவிகள் பாதுகாக்கப்பட்டன.

தமிழ்மக்களின் ஆதரவு பெறாது 1972ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முற்றாக நிராகரித்த தந்தை செல்வா தமிழ் ஈழம் தான் மாற்று வழியென்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இத்தீர்மானத்தை முன்வைத்து தமிழ் ஆயுதக் குழுக்கள் குறிப்பாக விடுதலைப் புலிகள் தீவிரமாகப் பேராடி சிங்கள அரசை கதிகலங்க வைத்தனர். 30ஆண்டுகாலமாக தீவிரமாக போராடிய விடுலைப் புலிகளின் வீரப்போராட்டத்தை சிங்கள அரசு 20 உலக நாடுகளின் ஆயுத பலத்துடன் வீழ்ச்சியடையச் செய்தது. 

2009ல் முள்ளிவாய்க்காலில் 40 000 தமிழ் மக்களை இனக்கொலைசெய்த அரசு, மேலும் தமிழ்மக்களை அடக்குவதற்கு 150,000 இராணுவத்தை வடகிழக்கில் அமர்;த்தி தமிழர்களின் பாரம்பரிய நிலஙகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றி வருகன்ற கொடுமையையும் அறிவீர்கள்..

முள்ளி வாய்க்காலின் பின் தமிழர்கள் மிகப் பலயீனம் அடைந்த நிலையிலுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ் நிiயில் ;த.தே.கூட்டமைப்பின் தலைவர் கௌரவ.இரா சம்பந்தன் தமிழ் மக்களின் தலைமையை ஏறறு செயறபட்டு வருகிகின்றார்.;. இவரிடம் ஆயுதமில்லை, ராஜதந்திரத்தை ஆயதமாககொண்டு தமிழ்; மக்களின் உரிமை; போராட்டததை படிப்படியாக முன்னெடுத்து வருகிறார்.

முள்ளிவாக்கால் வெற்றிpயினால்  தமிழர்களை அடக்கி ஒடுக்கிவந்த முன்னாள்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜாவின் கொடூர ஆட்சியை வீழ்த்தி நல்லாட்சியை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு வகுத்தவர் சம்பந்தர் ஐயா அவர்கள். அதுஅவருடைய ராஜதந்திரம்

2015ல் உருவாக்கப்பட்ட நல்லாட்சி ஊடாக ஒரு அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் ,அண்மையில் நடைபெற்ற உள்ளுராச்சி தேர்தல் முடிவுகள், சிங்கள தேசத்தில் அரசயல்ஷ சூழ்நிலையை மாற்றிவருகிறது. திட்டமிட்ட அரசியல் தீர்வை நல்லாட்சி நிiவேற்றாதுவிடில் நாம் ;மாற்று வழியை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்..

நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் த.தே. கூட்டமைப்பு தனது பலத்தை இழந்து விடவில்லை. கொள்கையில் உறுதியாக விருக்கின்றனர். அவர்களால் தான் எத்தகைய தீர்வையும் முனனெடுக்க முடியும். இன்று வெளிநாடுகளின் முழுமையான ஆதரவு த.தே.கூட்டமைப்புக்கே உண்டு. இது யதார்த்தம். இந்த அரசு மாற்று வழிக்கு த.தே. கூட்டமைப்யை தள்ளுமாகில் அது தனிநாடாக அமையக்கூடும். உலக நாடுகளும் அதை ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.

கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சி தலைவர் என்ற ரீதியில் இதுவரை 35க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் தலைவர்களையும், அரச அதிகாரிகளையும் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அடித்தளம் இட்டுள்ளார். மாற்று அரசியல் தீர்வு வரும்போது வெளிநாடுகளின் உதவியை நிச்சயம் பயன்படுத்துவார்

நாம் 70 ஆண்டுகளாக சிங்கள அரசுக்கு அடிமையாகவிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களை இழந்தோம். உடமைகளை இழந்தோம் பொருட்களை இழந்தோம் அரச துறை பதவிகளை இழந்தோம் இனிமேல். எதையு; இழக்க தயாரில்லை என் திடசங்கற்பம் கொள்வோம். வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு ஒரு சுயட்சியை அமைப்போம். நாம் வீரத் தமிழர்கள் என்ற நிலை மாறாது இருக்க ஒன்றுபடுங்களம்.

பிரிந்து நின்று கண்டனக் குரல் கொடுப்பவர்கள் யதார்த்தமாக சிந்தித்து சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வைக் கொண்டு வருதற்கு ஆதரவு நல்கவேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும்.

புலம்பயர் நாடுகளிலுள்ள தமிழ. அமைப்பகளில் பல சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஆதரவு நல்க ஆர்வம் கொண்டுள்ளனர். த.தே.கூட்டமைப்பின் உயர்மட்ட அரசியல் குழு வெளிநாடு சென்று தமிழ் அமைப்களை சந்தித்து அவர்களது ஆதரவைத் திரட்ட வேண்டும். தமிழ் மக்களிடைய மேலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு இச் சந்திப்பு அவசியமாகும். .

சர்வதேச நாடுகளின் ஆதரவை தொடாந்து வளர்க்க த.தே.கூட்டமைப் சர்வதேச உயர் மட்ட அரசியல் குழுவை அமைத்து யெற்ட வேண்டியது அவசியம். மாற்று வழிக்கு நாம் தயராகுவோமாக.