tna seithi founder

A TNAUK Publication

அன்பிற்கினிய எம்மவர்களே...!

இலங்கையில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்மக்களின் சார்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முன்வந்தது. அக்கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்தற்காவும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப்பெறுவதற்காகவும் தேர்தல் நிதி திரட்டுவதற்காகவும்; திரு. ஆவரங்கால் சின்னத்துரை, திரு.ஐ.தி.சம்பந்தன் ஆகியோர் ஆதரவாளர் கூட்டத்தைக கூட்டினார்கள்.

அக்கூட்டத்தில் தேர்தல் நிதிதிரட்டுவதற்கு ஆதரவாளர்கள் இணக்கம் தெரிவித்தனர். தேர்தல் நிதிதிரட்டி அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் 90 வீதமான வெற்றியை பெற்றது. இது எமக்கு உற்சாகம் அளித்தது. தலைமைபீடத்துடன் தொடர்பு வலுப்படுத்தப்பட்டது. இதை ஒரு அமைப்பாக உருவாக்க பலர் விரும்பினார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரமச்சந்திரன் அவர்கள் இருமுறை இலண்டன்வந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிழை அமைக்கப்படவேண்மென ஆதரவு நல்கினார். கிளையை அமைப்பதற்கு கலாநிதி க.மனோகரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தார். அவர் நியமித்த குழுவும் ஆதரவாளர் குழுவும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையாகும்.

இக்கிளைக்கு அமைப்பு விதியொன்று தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைப்பாக செயற்பட்டுவருகிறது. அதன்பிரகாரம் சட்டத்தரணி திரு.இரத்தினசிங்கம் தலைவராகவும், பொதுச் செயலாளராக திரு.வி.ஜே.போஸ், பொருளாளராக திரு.ரி.விஜேயதரன் சர்வதேசஇணைப்பாளராக திரு.ஐ.தி.சம்பந்தன் ஆகியோர் பணியாற்றுவதோடு 17 பேர் கொண்ட செயற்குழுவுடனும் எமது கிளை இயங்கிவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்ளின் அரசியல்பிரச்சனைகளை முன்னெடுத்துவருகிறது. இது தமிழ் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்புமாகும். இதன் நிருவாக இயந்திரமும், ஊடகமும் சிறந்த முறையில் செயற்படவேண்டியது அவசியமாகும்.

தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகப் பிரயத்தனமாக முயன்று வருவதை அணைவரும் அறிவீர்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கென ஊடகங்களோ, இணையதளங்களோ முறையாக செயற்படாத நிலைமை காணப்படுகின்றது. இக்காரணத்தால் கூட்டமைப்பின் அரசியல், பொருளாதார சமுகம் சார்ந்த நடவடிக்கைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியாதுள்ளனர்.

தற்போதைய சூழலில் பல பல ஊடகங்களும் இணையதளங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டுகின்றன. இதனால் மக்கள் குழப்பமடைகின்றனர். ஆரோக்கிமான விடயங்கள் கூட சிக்கல் நிலைமைகளுக்குள் தள்ளப்படுகின்றன. எனவே மேற்கூறிய விடயங்களைக் கருத்தில்கொண்டும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக ஆற்றும் சேவைகள், மேலதிக தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான வழியமைத்துக்கொடுக்கும் வகையிலும் இணைய தளத்தில் அனுபவங் கொண்ட குழுவினால் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய தளம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் முழுமையான பொறுப்பில் செயற்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம். இந்த இணையதளம் தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற இணைய தளமாக அவர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யுமென எதிபார்க்கின்றோம்.

-தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கிளை) பிரித்தானியா-